தங்கும் விடுதிகள், கோயில்களில் போலீஸார் தீவிர சோதனை

இலங்கை சம்பவத்தின் தொடர்ச்சியாக தமிழகத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள தங்கும் விடுதிகளிலும், கோயில்களிலும்


இலங்கை சம்பவத்தின் தொடர்ச்சியாக தமிழகத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள தங்கும் விடுதிகளிலும், கோயில்களிலும் போலீஸார் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இலங்கை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும் தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் கர்நாடக மாநில போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் கர்நாடக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கர்நாடக போலீஸார் தமிழக போலீஸாரை உஷார் படுத்தினர்.
இதையடுத்து,  திருச்சியில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையர் ஜியாவுல்ஹக் தலைமையில் போலீஸார் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் சந்தேகப்படும்படியாக யாரும் தங்கி இருக்கிறார்களா என காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிதாக குடிவந்தவர்கள் பற்றிய விபரங்களையும் போலீஸார் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதே போல திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் போலீஸாரும் இணைந்து பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலமாகவும்,மோப்ப நாய் மூலமாகவும் சோதனை செய்தனர்.
ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில்: ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். 
ஏற்கெனவே ஸ்ரீரங்கம் கோயில்களில் நான்கு  நுழைவு வாயில் களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது.
தற்போது கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com