திருச்சி பெல் ஊழியருக்கு ஜீவன் ரக்ஷா பதக் விருது

திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தில் (பெல்) தீ விபத்தை தடுத்து பெரும் விபத்தையும், உயிரிழப்புகளையும் தடுத்த ஊழியர் எம். பத்மநாபனுக்கு, 2018ஆம் ஆண்டுக்கான தீரச் செயலுக்கான மத்திய அரசின் ஜீவன்


திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தில் (பெல்) தீ விபத்தை தடுத்து பெரும் விபத்தையும், உயிரிழப்புகளையும் தடுத்த ஊழியர் எம். பத்மநாபனுக்கு, 2018ஆம் ஆண்டுக்கான தீரச் செயலுக்கான மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக் விருது வழங்கப்பட்டது.
இவர், திருச்சி பெல் நிறுவனத்தில் கொதிகலன் பிரிவில் தொழில் வினைஞராக பணியாற்றி வருகிறார். இவரது பணியிடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய அசிட்டிலீன் வாயு உருளை பயன்படுத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் இந்த உருளையை பயன்படுத்தும்போது கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த பத்மநாபன், துரிதமாக செயல்பட்டு நிறுவனத்தில் இருந்த தீயணைப்பான் கருவியை பயன்படுத்தி உடனடியாக தீயை அணைத்தார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், உயிரிழப்புகளும், பொருள்சேதமும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டது. பத்மநாபனின் இந்த செயலை பாராட்டி புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஜீவன் ரக்ஷா பதக் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய அரசின் கனரக தொழிற்சாலைகளுக்கான செயலர் ஏ.ஆர். சிஹாக், இந்த விருதை பத்மநாபனுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், பெல் நிறுவன மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தி, மனிதவள மேம்பாட்டு இயக்குநர் பந்த்யோபத்யாய் ஆகியோர் கலந்து கொண்டு பத்மநாபனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com