பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஹெச்டிஎப்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாணவ, மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்விக்கட்டணம் செலுத்த ஏதுவாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


மாணவ, மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்விக்கட்டணம் செலுத்த ஏதுவாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்கலைக் கழகத்துக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ஆன்-லைன் மூலம் செலுத்துவதற்கு ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சேவை புரிந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 4ஆவது வங்கியாக ஹெச்டிஎப்சி வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் பல்கலைக் கழக பதிவாளர் ஜி. கோபிநாத், வங்கியின் கிளஸ்டர் தலைமை அதிகாரி தேவராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், வங்கியின் மேலாளர்கள் எம். சண்முகசுந்தரம், எம். தாமரைச்செல்வி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், வங்கி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com