காவிரியில் வெள்ளப் பெருக்கு: குடிமராமத்து பணிகளை உடனே நிறுத்த வலியுறுத்தல்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி, டெல்டா பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி, டெல்டா பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பருவமழைக்கு முன்பாகவே குடிமராத்து பணிகளை மேற்கொள்ள காவிரி, டெல்டா விவசாயிகள் தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றனர். இதன்படி, காவிரி, டெல்டா பகுதிகளில் கடந்த சில நாள்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்போது, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தேவையின்றி நிதியை செலவிட வேண்டாம் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் கூறியது: கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் முழுமையாக திறந்துவிடப்படுவதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூருக்கு 3 லட்சம் கன அடிவரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. எனவே, உடனடியாக இந்தப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றார்.
காவிரி, டெல்சா விவசாயிகள் நலச் சங்க துணைச் செயலர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன் கூறியது: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் குடிமராத்து பணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வெள்ளம் வடிந்த பிறகே பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிமராமத்துக்கு ஒதுக்கிய நிதியை வேறு பணிகளுக்கு செலவிடாமல், வங்கியில் இருப்பு வைத்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்திய பிறகு மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com