கோயில் நுழைவுவாயில்களில் உள்ள தி.க. கொடிகளை அகற்ற வேண்டும்: அகில இந்திய இந்து மகாசபை கோரிக்கை

கோயில்களின் நுழைவுவாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள திராவிடர் கழகக் கொடிகளை அகற்ற வேண்டும் என

கோயில்களின் நுழைவுவாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள திராவிடர் கழகக் கொடிகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இந்து மகா சபா சார்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து, அகில இந்திய இந்து மகாசபா சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது :
108 திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற முதல் திருத்தலமான ஸ்ரீரங்கம் கோயில் நுழைவுவாயில் மற்றும் திருவானைக்கா நுழைவுவாயில் பகுதிகளில் திராவிடர் கழகம் சார்பில் கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர். திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்,  இந்து மதக்கோட்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் கோயில்களுக்கு முன் கொடியேற்ற கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. எனவே தி.க. சார்பில் கோயில்கள் முன் ஏற்றப்பட்டுள்ள கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பெரியார் சிலைகள், தொடர்புடை கல்வி நிறுவனங்கள், திக அலுவலகங்கள் முன் காவிக்கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com