சுதந்திர தினம்: ரயில் நிலையம், கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையம், கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையம், கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருச்சி ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தஞ்சை, சென்னை, மதுரை சென்று வரும் ரயில் வழித்தடங்களில் செவ்வாய்க்கிழமை போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 
அப்போது, வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயை வரவழைத்து நடைமேடை, பொருள்கள் பாதுகாப்பகம், ரயில் பெட்டிகள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். 
அதுபோல், வழித்தடங்களில் பிரத்யேக கருவிகள் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல்,  வழிபாட்டு தலமான ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, சமயபுரம் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com