மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர்  கோயிலில் உறியடித் திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை உறியடித் திருவிழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை உறியடித் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி உற்ஸவ மூர்த்தி கிருஷ்ணர் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்டு உறியடித் தோரண வாயிலை அடைந்தார். அங்கு, கிராம மக்களில் மத்தியில் உறியடித்து விளையாடினார்.  பின்னர் வழுக்கு மரத்தில் ஏறி கிருஷ்ணன் பணமுடிப்பை எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. பிறகு கிருஷ்ணர் நகர் வலம் வந்து கோயிலை அடைந்தார்.
அதனைத்தொடர்ந்து பாமா, ருக்குமணி திருக்கல்யாணம் உற்ஸவம்  கொலு மண்டபத்தில் நடைபெற்றது.  இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் முத்துவீரலக்கப்ப நாயக்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com