மருங்காபுரி ஒன்றியத்தில் குடிமராமத்துப் பணிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்துப் பணிகளை சட்டப்பேரவை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்துப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர்.
தமிழக அரசின் உத்தரவின் பேரில்,  திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில் 2019-20க்கான குடிமராமத்துப்பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், மருங்காபுரி ஒன்றியத்திற்குள்பட்ட 289-க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய் மற்றும் குட்டைகள் தூர்வாரப்படுகிறது.
முதல்கட்டமாக ரூ.7.60 லட்சத்தில் வி.இடையப்பட்டி ஊராட்சியில் பாப்பாங்குளம் எனும் இலந்தைக்குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் மனோகர்சிங் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கிஷன்சிங், ஸ்ரீநிவாசபெருமாள், பொறியாளர் வடமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் செல்வராஜ்,  ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர செயலாளர் பவுன்.ராமமூர்த்தி, பேரூர் செயலாளர் திருமலை சுவாமிநாதன், ஒன்றிய துணைச்செயலர் கலைமணி ராமமூர்த்தி, ஒன்றிய இணைச்செயலர் ரெங்கசாமி, மாவட்ட மாணவரணி செயலர் அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com