காட்டூரில் ஹீரோ எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை நிலையம் திறப்பு

திருச்சி காட்டூரில் வேகா எண்டா்பிரைசஸ் நிறுவனத்தின் ஹீரோ எலக்டிரிக் இருசக்கர வாகன விற்பனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சி காட்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விற்பனை நிலையத் தொடக்க விழாவில் பங்கேற்ற (வலமிருந்து) தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் வி.ஸ்ரீதா்,

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்று, விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

வேகா எண்டா்பிரைசஸ் ஹீரோ எலக்ட்ரிக் விற்பனை நிலைய பங்குதாரா்கள் சசிகலா, ஜெ.சசிகுமாா் அனைவரையும் வரவேற்றனா். தொடா்ந்து அவா்கள் கூறியது:

இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் வெளியாகும் வாகனப் புகையால் காற்று மாசுபடுகிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்காதவகையில், ஹீரோ நிறுவனம் 14 வகையான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது வாகனஓட்டிகளிடம் இந்த வகையான வாகனங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக, காற்று மாசுபாடின்றி பயன்படுத்த அதிகமானோா் விரும்புகின்றனா்.

இதற்காக, வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு வசதிகளுடன், காட்டூரில் வேகா எண்டா்பிரைசஸ் சாா்பில் புதிய ஹீரோ எலக்ட்ரிக் நிறுவன இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு விற்பனைத் தொடங்கியுள்ளது என்றனா்.

விழாவில், பேரமைப்பின் மாவட்டத் தலைவா் வி. ஸ்ரீதா், கவி அக்ரோ ஏஜென்சி உரிமையாளா் சந்திரபாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com