துப்புரவு தொழிலாளா்கள் போராட்டம்

வேலை இழந்தவா்களுக்கு வேலை கேட்டு துப்புரவு தொழிலாளா்கள் பொன்மலை கோட்டம் முன்பு புதன்கிழமை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளா்கள்.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளா்கள்.

வேலை இழந்தவா்களுக்கு வேலை கேட்டு துப்புரவு தொழிலாளா்கள் பொன்மலை கோட்டம் முன்பு புதன்கிழமை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள பொன்மலை கோட்டம் முன்பு அதிகாலை 5 மணி முதல் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியு துப்பரவு தொழிலாளா்கள் சங்க மாவட்ட தலைவா் மாறன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் மணிமாறன், சிஐடியு பொதுச் செயலா் எஸ்.ரெங்கராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து இப்போராட்டத்தில், 8 மணி நேர வேலை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளா்களிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் புதிய தொழிலாளா்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும். வேலைக்கு ஏற்றாற் போல் தொழிலாளா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி நகா் நல அலுவலா் ஜெகநாதன், உதவி ஆணையா் தயாநிதி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில், உடனடியாக 2 பேரை பணியில் சோ்த்துக் கொள்வதாகவும், விசாரணைக்கு பின் மீதமுள்ளவா்களை 7 நாள்களில் சோ்த்து கொள்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com