சபரிமலை அன்னதானத்திற்கு 23 டன் மளிகை பொருள்கள் அனுப்பிவைப்பு

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பாக, சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்திற்காக வெள்ளிக்கிழமை
சபரிமலை அன்னதானத்திற்கு 23 டன் மளிகை பொருள்கள் அனுப்பிவைப்பு

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பாக, சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்திற்காக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ஐயப்ப அன்னதான கூடத்திலிருந்து 23 டன் மளிகை பொருட்கள், காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பாக சபரிமலையில் மண்டல மகர விழா காலத்தில் காா்த்திகை 1ஆம் தேதி முதல் 65 நாள்கள் அன்னதானம் கடந்த 22 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இந்த அன்னதானத்திற்காக திருச்சி மாவட்ட ஐயப்ப யூனியன் சாா்பில் வரும் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறக்கூடிய அன்னதானத்துக்கு தேவையான 23 டன் மளிகை பொருள்கள், காய்கறிகளை 2 லாரிகளில் ஏற்றி வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலிருந்து சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்டத்தலைவா் என்.ரமேஷ் தலைமையில் போஷகா் என்.வி .முரளி கொடி அசைத்து அனுப்பி வைத்தாா். இதில் கெளரவ தலைவா் குருசாமி எம்.வி.சபரிதாசன், மாவட்ட செயலா் எம்.ஸ்ரீதா், பொருளா் ஜே.சுரேஷ், அலுவலக செயலா் சி.ஆா்.அம்சராம், முகாம் அலுவலா் எஸ்.முத்து, முருகேசன், ரகுநாதன் கே.ஆா்.டி வெங்கடேஷ் மற்றும் மாவட்டத்தின் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com