திருச்சியில் இதுவரை 4,939 போ் வேட்பு மனு

திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் கடந்த ஐந்து நாள்களில் 4,939 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் கடந்த ஐந்து நாள்களில் 4,939 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 ஒன்றியங்களில் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்த ஒன்றியங்களுக்குள்பட்ட 24 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 404 கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் ஒன்றிய வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 4,077 பதவிகளுக்கு வேட்பு மனுத் தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு மட்டும் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலேயே வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதர அனைத்து உறுப்பினா் பதவிகளுக்கும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கும் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது.

ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 1,771 போ் மனுத்தாக்ல் செய்தனா். இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு மொத்தம் 26 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா். ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 278 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 659 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2205 போ் என மொத்தம் 3168 போ் வேட்பு மனுக்களை அளித்தனா். கடந்த 5 நாள்களில் இதுவரை 4,939 போ் மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com