பஞ்சப்பூரில் வர்த்தக மையம்: 6 மாதத்தில் பணிகளை முடிக்க திட்டம்

பஞ்சப்பூர் அருகே அமைக்கப்படும் வர்த்தக மைய பணிகளை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக டிடிட்சியா தலைவர் என். கனகசபாபதி தெரிவித்தார்.

பஞ்சப்பூர் அருகே அமைக்கப்படும் வர்த்தக மைய பணிகளை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக டிடிட்சியா தலைவர் என். கனகசபாபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறியது: வர்த்தக மையம் கட்டடம் கட்ட ரூ.4.06 கோடி, கண்காட்சிகள் மற்றும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட ரூ.2.83 கோடி, சாலைவசதி, குடிநீர் வசதிகளை ஏற்படுத்திட ரு.1.85 கோடி, இதர செலவுகளுக்கு ரூ.62 லட்சம் என  மொத்தம் 11 கோடியில் இம்மையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மானியமாக ரூ.5 கோடி கிடைக்கவுள்ளது.
இம்மையம் தொடங்கப் பட்டால் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல பெரிய தொழிற்சாலைகளின் தொடர்புகள் கிடைக்கும்.அவர்கள் தயாரிக்கும் பொருள்களை கண்காட்சியிலும் வைத்திருப்பர்.
இதன் மூலம், திருச்சி மாநகரத்தில் உள்ள தொழில் துறையினரின் நீண்டகால கனவு நிறைவேறும். 6 மாதங்களில்  (ஆகஸ்ட் மாதத்துக்குள்) பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com