திருவானைக்கா காடைப்பிள்ளை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

திருவானைக்கா ஜம்புகேசுவரர் நகரிலுள்ள ஸ்ரீகாடைப்பிள்ளை அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவானைக்கா ஜம்புகேசுவரர் நகரிலுள்ள ஸ்ரீகாடைப்பிள்ளை அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுதரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாடைப்பிள்ளை அய்யனார்,  நாகசுப்பசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் கடந்த 15  ஆம் தேதி  விக்னேசுவரபூஜையுடன் தொடங்கின. தொடர்ந்து காவிரியிலிருந்து திருமஞ்சனம் கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜை  தொடங்கியது. சனிக்கிழமை காலை மற்றும் மாலையில் 2,3 ஆம் காலயாகசாலை பூஜைகளும், காடைப்பிள்ளை அய்யனார் சுவாமிக்கு யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைக்குப் பின்னர், மகா பூர்ணாஹூதியுடன் கடங்கள்
புறப்பாடு நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு அனைத்து விமான கலசங்களுக்கும்  வேதவிற்பன்னர்களால் புனித நீர் ஊற்றப்பட்டுமகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன்,எஸ். வளர்மதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
காவடி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், நாச்சியார்புதூர் ஸ்ரீ காவடி முருகன்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில், பிப்.3 ஆம் தேதி பந்தல்கால் நடுதல், முளைப்பாரி தெளிப்புடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. பிப்.15 ஆம் தேதி திருஈங்கோய்மலை காவிரியாற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை  கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, லட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேசுவர பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாஹுதிக்குப்  பின்னர், காலை 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கே. சின்னத்தம்பி,  கோபால், விழாக்குழுவினர் எம்.ஏ. ஆறுமுகம், பி. சுப்பிரமணியன், ஏ. முருகேசன், எம். பாலன், வி. சின்னையன், ரங்கராஜன், பூவலிங்கம் உள்ளிட்டோர் செய்திருந்னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com