ரூ.6.55 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6.55லட்சம்மோசடி செய்த தம்பதி மீது


வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6.55லட்சம்மோசடி செய்த தம்பதி மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 
வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை என்.எம்.தெருவைச் சேர்ந்த ஹக்கீம், இவரது மனைவி ராம்நாத் நிஷா. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக கூறியதை நம்பி, உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் அசோக்குமார்(47) தனக்கு அறிமுகமானவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரிடம் மொத்தம் ரூ.6.55 லட்சத்தை பெற்றுள்ளார். அந்தப் பணத்தை ஹக்கிமின் வங்கிக் கணக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு செலுத்தியுள்ளார்.
அதன்பிறகு, வேலை வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது ஹக்கீம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அசோக்குமார் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஹக்கீம், நிஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com