தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட பழைய ஆட்சியரகச் சாலையில்

தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட பழைய ஆட்சியரகச் சாலையில் தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போக்குவரத்தை காரணம் காட்டி தரைக்கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது. மாநகராட்சி மற்றும் அறநிலையத் துறை நிர்வாகங்கள் இணைந்து பெரு நிறுவனங்களுக்கு  தாரை வார்த்துக் கொடுத்த இடத்தை கைப்பற்ற வேண்டும்.
என்.எஸ்.பி.சாலை, நந்திகோயில் தெரு, தேரடி பஜார், சின்னக்கடைவீதி பகுதிகளைத் தரைக்கடை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டும்.  தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் ஏஐடியுசி சார்பில் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் ஏ.அன்சர்தீன் தலைமை வகித்தார். சங்கத் துணைத் தலைவர் ஏ.கே.திராவிடமணி, கௌரவத் தலைவர் எஸ்.சிவா முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.சுரேஷ், மாவட்ட செயலாளர் என்.மணி, ஏஐடியுசி மாவட்டக்குழு உறுப்பினர் கே.அண்ணாத்துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com