நாளை குடிமைப் பணிகள் தேர்வு: வினாத்தாள்கள் எடுத்துச் செல்ல 4 குழுக்கள்

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2)  நடைபெறவுள்ள குடிமைப் பணிகள் தேர்வுக்காக

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2)  நடைபெறவுள்ள குடிமைப் பணிகள் தேர்வுக்காக, வினாத்தாள்கள் எடுத்துச் செல்ல 4 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெறவுள்ளன. இத் தேர்வில் 5,267 பேர் பங்கேற்கவுள்ளனர்.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்துச் செல்வதற்காக 4 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் தலைமை வகிப்பார். துணை வட்டாட்சியர், இளநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய காவலர் உடனிருப்பர். தேர்வுகள் முடிந்து விடைத்தாள்களையும் இந்த குழுவினர் பாதுகாப்பாக எடுத்து வருவர். இவைத்தவிர, ஒவ்வொரு மையத்திலும் வட்டாட்சியர் நிலையிலான அலுவலர் ஆய்வுப் பணியில் ஈடுபடுவர்.  தேர்வு எழுதுவோரில் 24 பேருக்கு தலா இரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தடை செய்யப்பட்ட மின்சாதனப் பொருள்களை தேர்வர்கள் எடுத்துச் செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com