கூடங்குளம் 3, 4ஆவது அணு உலைகளில் மின்னாக்கிகளை நிர்மானிக்கும் ஆணை: பெல் நிறுவனத்துக்கு வழங்கியது என்பிசிஐஎல்

கூடங்குளத்தில் புதிதாக கட்டமைக்கப்படும் 3, 4-ஆவது அணு உலைகளுக்கான மின்னாக்கிகளை நிர்மானிக்கும் ஆணைகளை பெல் நிறுவனம் பெற்றுள்ளது.

கூடங்குளத்தில் புதிதாக கட்டமைக்கப்படும் 3, 4-ஆவது அணு உலைகளுக்கான மின்னாக்கிகளை நிர்மானிக்கும் ஆணைகளை பெல் நிறுவனம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக, பெல் நிறுவனத் தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரஷிய நாட்டின் உதவியுடன் தமிழகத்தில் அணு உலைகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கூடங்குளத்தில் 3, 4ஆவது அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. தலா ஆயிரம் மெகாவாட் கொண்ட நிகர் சுழலி மின்னாக்கிகளை நிர்மானிக்கும் பணிகளை பெல் நிறுவனத்துக்கு இந்திய அணுசக்திக் கழகம் (என்பிசிஐஎல்) வழங்கியுள்ளது. கடும் போட்டிகளுக்கு இடையே இந்த ஆணையை பெல் நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.440 கோடிக்கும் கூடுதல் மதிப்புடைய இந்த ஆணையைப் பெற்றுள்ளதன் மூலம், கூடங்குளத்தில் அமையும் அணு உலைகளின் உபகரணங்களை நிர்மானிக்கும் பணியை பெல் நிறுவனம் மேற்கொள்ளும். ஒப்பந்தப் புள்ளியிலும் மிகக் குறைந்த ஏலத் தொகையை குறிப்பிட்ட நிறுவனமாக பெல் நிறுவனம் தேர்வாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள 18 அழுத்த கனநீர் உலைகளுள் 12 உலைகளில் பெல் நிறுவனத்தால் வடிவமைத்து வழங்கப்பட்ட நீராவி சுழலி மின்னாக்கித் தொகுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உலைகளில் நிறுவப்பட்ட திறனில் பெல் நிறுவனத்துக்கு 74 விழுக்காடு கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாது காக்ராபார், ராவட்பாட்டா அணு மின்நிலையங்களில் தலா 2 வீதம் 700 மெகாவாட் நிகழ் சுழலி மின்னாக்கி தொகுப்புகளை 4 எண்ணிக்கையில் பெல் நிறுவனம் கட்டமைத்து வருகிறது. பன்னாட்டுத் தரம் மற்றும் நெறிமுறைகளுக்கு தகுந்த அணுமின்நிலைய உபகரணங்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், சோதித்தல் ஆகியவற்றில் தனிப்பட்ட கட்டமைப்பையும், திறம்பட்ட மனிதவளத்தையும் பெல் நிறுவனம் கொண்டிருப்பதால் அணு மின் திட்டங்களில் பெல் நிறுவனத்துக்கான பங்களிப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அணு மின் திட்டங்களில் மூன்று நிலைகளிலும் பெல் நிறுவனம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com