திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகத்துக்கு மாநில சங்கம் அங்கீகாரம்

திருச்சியில் அனைத்து டேபிள் டென்னிஸ் போட்டிகளை நடத்த திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் அனைத்து டேபிள் டென்னிஸ் போட்டிகளை நடத்த திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  வி.ராமசுப்ரமணியனைத் தலைவராகக் கொண்ட திருச்சிராப்பள்ளி மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகத்துக்கு, தமிழ்நாடு டேபிள் டென்னிஸ்   கழகத்துடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அனைத்து டேபிள் டென்னிஸ் சம்பத்தப்பட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட  டேபிள் டென்னிஸ் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களுக்கும் சங்க தலைவர் வி. ராமசுப்பிரமணியனை 99945 61573 என்ற செல்லிடப்பேசியில் தொடர்புக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com