பொன்னணியாறு அணை பாசன வாய்க்கால்  பகுதிகளில் ரூ.3 கோடியில் சீரமைப்புப் பணி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பொன்னணியாறு அணை பாசன கால்வாய் பகுதிகளை சுமார் ரூ. 296 லட்சத்தில்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பொன்னணியாறு அணை பாசன கால்வாய் பகுதிகளை சுமார் ரூ. 296 லட்சத்தில் கான்கிரீட் பாதைகளாக சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. 
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பொன்னணியாறு அணை கட்டுமானப் பணிகள் முடிந்து கடந்த 1975-இல் திறந்து வைக்கப்பட்டது.  
இதன் கொள்ளளவு 51 அடி, இதன் மூலம் 850.6 ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் பயனடையும். 
பாசனக் காலமான செப்.1 முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் அணையின் கொள்ளளவு 43 அடியை எட்டும் போது அணை நீர் பாசனத்துக்காக திறந்து விடப்படுவது வழக்கம். 2012-இல் அணை நீர் திறந்து விடப்பட்டது. 
இந்நிலையில், அணையின் 6,225 மீட்டர் தொலைவு சேதமடைந்த பாசன வாய்க்கால் பகுதிகளை உலக வங்கியின் இந்திய தரக்கட்டுப்பாடு ஆலோசகர்கள் மல்ஹோத்ரா,  மற்றும் ராஜகோபால், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர்கள் ஆகியோர் கடந்த செப். 18-இல் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். தொடர்ந்து ரூ. 296 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, சேதமடைந்த 6,225 மீட்டர் தொலைவு பாசன வாய்க்கால் பகுதிகளை கான்கிரீட் பாதைகளாக சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. கடந்த 7 ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இன்றி காணப்படும் அணையின் பாசன வாய்க்கால் பகுதிகளை சீரமைப்பதில் எந்தப் பயனுமில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com