மணப்பாறை அருகே  வைகை அதிவிரைவு ரயிலின்  சங்கிலி கழன்றதில் தண்டவாளம் சேதம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வைகை அதிவிரைவு ரயில் பெட்டியின் சங்கிலி கழன்று தண்டவாளப் பகுதி  சேதமடைந்தது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வைகை அதிவிரைவு ரயில் பெட்டியின் சங்கிலி கழன்று தண்டவாளப் பகுதி  சேதமடைந்தது. 
மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் புதன்கிழமை காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, சோழவந்தான், திண்டுக்கல் வழியாக மணப்பாறை ரயில் நிலையத்திற்கு 19 நிமிடங்கள் காலதாமதமாக வந்தடைந்தது. அங்கிருந்து 8.54 மணிக்கு திருச்சி நோக்கி சுமார் 127 கி.மீ. வேகத்தில் புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில், கண்ணுடையான்பட்டி பகுதியில் ரயில்வே கேட்டை கடந்தது. 
அப்போது ரயில் பெட்டியின் இணைப்பு சங்கிலி கழன்று விழுந்து தண்டவாளப்பகுதியில் இருந்த மரக்கட்டை, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த தண்டவாளப் பகுதி ஆகியவை 100 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதில், சுமார் இரண்டரை அடி நீள தண்டவாளப் பகுதி சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட பலத்த சப்தத்தையடுத்து, கண்ணுடையான்பட்டி சிக்னலில் நிறுத்தப்பட்ட வைகை அதிவிரைவு ரயில், சுமார் 10 நிமிடங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com