ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 18th June 2019 08:38 AM | Last Updated : 18th June 2019 08:38 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் வடக்குத்தேவி தெருவில் 3 மாதங்களாக மூடப்படாமல் உள்ள சாக்கடைப் பள்ளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சியின் 3 ஆவது வார்டுக்குள்பட்ட இப்பகுதியில், சாக்கடைப் பராமரிப்புப் பணிக்காக 3 மாதங்களுக்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கோட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் அதிருப்தியடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதிச் செயலர் தர்மா தலைமையிலான நிர்வாகிகள், சாக்கடை பள்ளத்தில் கம்பு நட்டு வைத்து, படையலிட்டு இறுதிச்சடங்கு நடத்தினர். போராட்டத்தில் சங்கத்தின் துணைச்செயலர் ஜயக்குமார், சந்துரு, லோகு, முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.