திருவானைக்கா மேம்பாலத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவானைக்கா ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை  காவல்துறை, மாநகராட்சி மற்றும்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன்


திருச்சி: திருவானைக்கா ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை  காவல்துறை, மாநகராட்சி மற்றும்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு  செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர்  செய்தியாளர்களிடம்  கூறியது:
பாலம் அமைக்க நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ. 69 கோடியாக திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. பாலத்தின் கட்டுமானத்துக்கு மட்டும் ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது, சென்னை மார்க்கம், திருச்சி மார்க்கம், கல்லணை மார்க்கம் என 3 நிலைகளில் அணுகுசாலை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு,பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
 மேம்பாலத்துக்கு மின்விளக்கு அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. வர்ணம் பூசுதல், சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் அமைத்தல், பயன்பாட்டு சாலை அமைத்தல், நடைபாதை, மழைநீர் வடிகால் வசதி, தாங்குத் தூண்களுக்கான பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணி ஆகியவை தனித்தனியே நடைபெற்று வருகிறது. மக்கள் பயன்பாட்டுக்காக பாலத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் விரைவில்  திறக்கவுள்ளார். இதன் மூலம் 2.10 லட்சம் மக்கள் பயன்பெறுவர். 
ஸ்ரீரங்கம், திருவானைக்கா, லால்குடி, திம்மராயசமுத்திரம்,  திருவளர்சோலை, கிளிக்கூடு, சமயபுரம், முசிறி, குணசீலம், மண்ணச்சநல்லூர், வாளாடி ஆகிய பகுதிகளை திருச்சி மாநகரம், கரூர், குளித்தலையும் இணைக்க முடியும். அணுகுசாலை அமைக்கும் பணிகள் 4 மாதங்களுக்குள் முடிவடையும் என்றார்.
இந்த ஆய்வின்போது, மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர்கள் நிஷா, ஆ. மயில்வாகனன், சார்-ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், உதவி கோட்டப் பொறியாளர் மீனாட்சி, உதவிப் பொறியாளர் ஜனனி, வட்டாட்சியர் கனகமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com