மக்காத கழிவுகளை பெற்றுக் கொள்ள தனியார் நிறுவனத்துக்கு 5 ஆண்டு ஒப்பந்தம்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் மக்காத கழிவுகளை பெற்றுக் கொள்ள,   சமயபுரத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு 5 ஆண்டு


திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் மக்காத கழிவுகளை பெற்றுக் கொள்ள,   சமயபுரத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு 5 ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரனும்,  தண்டபாணி சிமென்ட் ஆலைத் துணைத் தலைவர் மு. முத்துக்கருப்பனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது: இந்த ஒப்பந்தத்தின்படி மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் பயன்படுத்தவே முடியாத மக்காத கழிவுகளை தண்டபாணி சிமென்ட்ஸ் ஆலை, தனது உற்பத்திக்கான எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளும்.
நுண்ணுயிர் உரம் செயலாக்க மையங்களில் சேகரிக்கப்படும்  நெகிழிப் பொருள்கள், துணிகள்,டயர்கள் மற்றும்  மக்காத கழிவுகளை எடுத்துச் செல்ல  5 ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஆண்டுக்கு  1000 டன் வரையிலான நெகிழி கழிவுகள் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com