எச்.ஏ.பி.பி. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

கோரிக்கைகளை வலியுறு த்தி திருச்சி நவல்பட்டு பகுதியிலுள்ள கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலையில்

கோரிக்கைகளை வலியுறு த்தி திருச்சி நவல்பட்டு பகுதியிலுள்ள கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 2 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.  
மத்திய படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றான கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலையில் (எச்.ஏ.பி.பி.), போதிய உற்பத்தி இலக்கை வழங்க வேண்டும். தேவையான மூலப்பொருள்களை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜூன்  17 முதல் எம்ப்ளாய்ஸ் யூனியன், பி.எம்.எஸ், அம்பேத்கர் யூனியன் சார்பில் கோரிக்கை வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.  அதன் நிறைவு நாளான 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில்,  ஜூன் 24 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டு, 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. சுழற்சி முறையில் தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
எம்ப்ளாய்ஸ் யூனியன், பி.எம்.எஸ். , அம்பேத்கர் யூனியன் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com