மாவட்டத்தில் 11 வட்டங்களில்  ஜூன் 28இல் அம்மா திட்ட முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவதில் ஏற்படும் காலதாமதம், இன்னல்களைப் போக்கவும், காலவிரயம், போக்குவரத்துச் செலவுக்கான பொருள் விரயத்தைத் தவிர்க்கவும் அந்தந்த கிராமங்களுக்கே அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி கிழக்கு வட்டத்தில் கே. சாத்தனூர் (தெற்கு), திருச்சி மேற்கு வட்டத்தில் பாண்டமங்கலம், திருவெறும்பூர் வட்டத்தில் பத்தாளப்பேட்டை, ஸ்ரீரங்கம் வட்டத்தில் ஓலையூர், மணப்பாறை வட்டத்தில் தொப்பம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் வேம்பனூர், லால்குடி வட்டத்தில் தாப்பாய், மணச்சநல்லூர் வட்டத்தில் ச. கண்ணனூர் (மேற்கு), முசிறி வட்டத்தில் தேவானூர், துறையூர் வட்டத்தில் வடக்குவெளி, தொட்டியம் வட்டத்தில் சின்னப்பள்ளிபாளையம் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும்.
முகாம்களில், அந்தந்தப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com