சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உண்ணாவிரதம்
By DIN | Published On : 04th March 2019 08:39 AM | Last Updated : 04th March 2019 08:39 AM | அ+அ அ- |

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக, 2016 ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் நிமலன், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். பொய் வழக்கில் கைது செய்து, அதற்குரிய தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில், தன்னை விடுவிக்கக் கோரி நிமலன் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் நிமலன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.