திருச்சியில் முத்தரையர் அரசியல் உரிமை மீட்பு மாநாடு
By DIN | Published On : 04th March 2019 08:38 AM | Last Updated : 04th March 2019 08:38 AM | அ+அ அ- |

திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் முத்தரையர்களின் அரசியல் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.கே.செல்வக்குமார் தலைமை வகித்து பேசினார். சங்க நிர்வாகிகளும்- வழக்குரைஞர்களுமான க.சந்தர், ரா.சிவனேசன், ச.சதீஷ், ரா.செல்லத்துரை முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் தாய்மார்கள்- சகோதரிகள் பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெ. நித்யா மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னர் ஜீயர் சுவாமி,கும்பகோணம் கோரக்கர் ஞானபீடம் நிர்வாகி கோரக்கர் சுவாமி,துருசுப்பட்டி சித்த ஆசிரமத்தின் சிவபிரமானந்தா சரஸ்வதி சுவாமிஆசியுரை வழங்கினர்.
திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கி.சி.பா.பெரியண்ணன் அரசு ,மாநில இளைஞரணி அமைப்பாளர் பெ.வைரவேல் ,மாநில கொள்கைப் பரப்புச் செயலர் தளவாய் ராஜேஷ், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன் ஆகியோர் மாநாட்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.
முன்னதாக, மத்திய மண்டலப் பொறுப்பாளர் கை.து. குணா வரவேற்றார். நிறைவில், பேட்டைவாய்த்தலை ராஜா நன்றி கூறினார்.