ஐஐஐடி புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஐடி), திருச்சி பிரிவு இயக்குநராக என்.வி.எஸ்.என். சர்மா பொறுப்பேற்றார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஐடி), திருச்சி பிரிவு இயக்குநராக என்.வி.எஸ்.என். சர்மா பொறுப்பேற்றார்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் வழிகாட்டுதல் இயக்குநராக என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் பொறுப்பு வகித்து வந்தார். 
இந்நிலையில், ஐஐஐடி திருச்சி பிரிவுக்கான முழுநேர இயக்குநராக எஸ்.வி.எஸ்.என். சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இவர், 1984ஆம் ஆண்டு காக்கிநாடாவில் உள்ள ஜேஎன்டியூ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் இளநிலை பட்டம் பெற்றார். 
கராக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 1985 ஆம் ஆண்டு தொடங்கி 1992 வரை முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்தார். வாரங்கலில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 1990ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர். 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை துறைத் தலைவராகவும், 2013 முதல் 2015 வரை மீண்டும் துறைத் தலைவராகவும், 2016, 2017இல் துறை இயக்குநராகவும் பணிபுரிந்தவர். சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதை 2016இல் பெற்றவர். இவரது வழிகாட்டுதலில் 6 மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளனர். பல்வேறு நாடுகளுக்கும் சென்று 90 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர். 
சென்சார் நெட்வொர்க், ஆன்டனா, எண்முறை மின்காந்தவியல் ஆகியவற்றில் அதீத ஆர்வமுடையவர். வெள்ளிக்கிழமை பதவியேற்ற சர்மாவுக்கு, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் மற்றும் ஐஐஐடி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com