மணப்பாறையில் 4 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: கரூர் மாவட்ட ஆட்சியர்

மணப்பாறையில் 4 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றார் கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சிருமான த. அன்பழகன். 

மணப்பாறையில் 4 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றார் கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சிருமான த. அன்பழகன். 
திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு வெள்ளிக்கிழமை வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு கையொப்ப முகாமை தொடக்கி வைத்தார். பின்  100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,  கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 68 வாக்குசாவடிகளும், மணப்பாறை பேரவைத் தொகுதியில் 4 வாக்குசாவடிகளும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. 
இந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.  இதுவரை இணையதள புகார்கள் வரவில்லை. பொதுமக்கள் சி-விஜில் செயலியை பயன்படுத்தி தங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணைக் கூட தெரிவிக்க விருப்பம் இல்லை என்றாலும் கூட புகார் தெரிவிக்கலாம். புகார்களின்மீது 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.  வேட்பாளர்கள் எந்தச் செலவையும் ரூ.70 லட்சத்திற்குட்பட்டு முன் அனுமதி பெற்று செலவு செய்யலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மணப்பாறை பேரவைத் தொகுதிக்குட்பட்ட உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் காமராஜ், மணப்பாறை வட்டாட்சியர் எம். சித்ரா, மருங்காபுரி வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com