பழங்கால கல்வெட்டுகள் புகைப்படக் கண்காட்சி

மத்திய அரசின் தொல்பொருள் துறை சார்பில், பண்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பழங்கால கல்வெட்டுகள் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.


மத்திய அரசின் தொல்பொருள் துறை சார்பில், பண்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பழங்கால கல்வெட்டுகள் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை தொடங்கிய இந்த புகைப்பட கண்காட்சியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ திறந்து வைத்தார். இக் கண்காட்சியில் ராஜேந்திர சோழர் கால செப்பேடுகள், காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், தஞ்சாவூர் பெரிய கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், பல்வேறு நாகரிகங்கள் குறித்த வரலாற்று பதிவுகளை விளக்கும் கல்வெட்டுகள், மன்னராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட நீதித்துறை குறித்த கல்வெட்டுகள், பல நூற்றாண்டுகள் கடந்த அரிய தகவல்களுடன் கூடிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இக் கண்காட்சியை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை  பார்வையிடலாம். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள், கல்வெட்டில் இடம்பெற்றுள்ள செய்திகள் குறித்து பார்வையாளர்களுக்கு கல்வெட்டு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ் கல்வெட்டு உதவி ஆய்வாளர்கள் பி.டி. நாகராஜன், பாலமுருகன் ஆகியோர் விளக்கம் அளிக்கவுள்ளனர். தொடக்க விழாவில், பல்கலைக் கழக துணைவேந்தர் கமலா சங்கரன், கல்வெட்டு இயக்குநர் கே. முனிரத்தினம், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புகைப்படங்களை பார்வையிட்டனர். கல்வெட்டு ஆய்வுகள் குறித்த விளக்க குறிப்பேடுகளும் வெளியிடப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com