அரசுப்பள்ளிக்கு கல்விச் சீர்
By DIN | Published On : 24th March 2019 03:02 AM | Last Updated : 24th March 2019 03:02 AM | அ+அ அ- |

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா மற்றும் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர் பள்ளிக்கு ரூ.1.50லட்சம் மதிப்பிலான தளவாடச் சாமான்கள்,கல்வி உபகரணங்கள் ஆகியனவற்றை எடமலைப்பட்டி புதூர் ஊராட்சியின் பிரதான சாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.ஜெயந்தியிடம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துச்செல்வம்,கணேசன்,வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.புதியதாக பள்ளியில் சேர்ந்த மாணவ,மாணவியர்களுக்கு கீரிடம், மலர் மாலைகள் அணிவித்தும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பள்ளிக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சியால் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக தலைமை ஆசிரியை பி.ஜெயந்தி தெரிவித்தார்.