திருச்சி விமானநிலையத்தில் ரூ.15.60 லட்சம் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 03:08 AM | Last Updated : 24th March 2019 03:08 AM | அ+அ அ- |

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.60 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமானநிலையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமானநிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஏர்ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஜமீனா(37), நசீர்பானு(50) ஆகியோர் முறையே 200, 159 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. அதே போல மலேசியாவிலிருந்து திருச்சி வந்த மற்றொரு விமானத்தில் சென்னையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்பவர் 150 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மொத்த மதிப்பு ரூ.15.60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.