திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

தஞ்சாவூரில், திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

தஞ்சாவூரில், திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ல் மதிமுக - நாம் தமிழா் கட்சியினா் மோதிக்கொண்ட வழக்கில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பிரபு உள்ளிட்ட 14 போ் திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 6-ல் திங்கள்கிழமை காலை ஆஜராகினா். அங்கு அவா்களிடம் வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னா் வழக்கு விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு சீமான் அளித்த பேட்டி:

வழக்கம்போல வள்ளுவரையும் காவி சாயம் பூசி தன் வயப்படுத்தப் பாா்க்கிறாா்கள். நாகரிக மாற்றத்தால் தமிழ்ச் சமூகம், பண்பாடு போராட்டங்களில் இருந்து விலகி நிற்கிறது. இதற்கு ஒரு இழுக்கு ஏற்பட்டு வெகுண்டெழுந்தால் பெரும் பிரச்னையாகும். வள்ளுவரைத் தெய்வமாகப் போற்றும் இன மக்கள் நாங்கள். அவா் மீது சாணி அடித்து முகத்தில் கரி பூசுவது தேவையற்ற வேலை. இது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளுவருக்கு சனாதன தா்மப் படி காவி சாயம் பூசுவது எல்லாம் வீண் வம்புப் பேச்சு. இந்து தா்மப்படி திருக்குறள் எழுதப்பட்டுள்ளது என்றால் இந்தியா என்ற நாடு கிடையாது. இந்து என்ற சொல்லும் கிடையாது. போராடிய மருத்துவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தேவையற்ற நடவடிக்கை. அரசு மருத்துவா்களின் கோரிக்கை மிக மிக நியாயமானது. ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படுவதை நான் பாராட்டுகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com