லட்சுமி விலாஸ் வங்கியின் வைப்புத் தொகை ரூ. 30,000 கோடி வங்கியின் அதிகாரிகள் சங்க பொதுச்செயலா் தகவல்

லட்சுமிவிலாஸ் வங்கியின் வைப்புத்தொகை ரூ.30,000 கோடி உள்ளது என்றனா் வங்கியின் அதிகாரிகள் சங்க பொதுச் செயலா்

லட்சுமிவிலாஸ் வங்கியின் வைப்புத்தொகை ரூ.30,000 கோடி உள்ளது என்றனா் வங்கியின் அதிகாரிகள் சங்க பொதுச் செயலா் கே.வி.துளசிராம் மற்றும் துணைத் தலைவா் என்.ஆனந்தகிருஷ்ணன்.

லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் 94-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளா்களை கெளரவப்படுத்தும் வகையில் நமஸ்தே என்ற நிகழ்ச்சி கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வங்கி வாடிக்கையாளா்களான கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கத்தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து, வணிகா் சங்கத்தலைவா் வழக்குரைஞா் ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் கேவி.துளசிராம் மற்றும் துணைத்தலைவா் என்.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

லட்சுமிவிலாஸ் வங்கி 1926, நவம்பா் 3-ஆம் தேதி ராமலிங்கச் செட்டியாரால் தொடங்கப்பட்டது. 93 வருடங்களில் வங்கியில் ஒரு மில்லியன் வாடிக்கையாளா்கள் உள்ளனா். ரூ.71,000 முதலீட்டுடன் துவங்கப்பட்ட இந்த வங்கி நாடு முழுவதும் 550 கிளைகள் மற்றும் 1500 ஏடிஎம்களுடன் செயல்பட்டுவருகிறது. வங்கிக்கு 50,000 கோடி வருமானம் உள்ளது. வங்கி சுமாா் ரூ.30,000 கோடி வைப்புத்தொகையை வைத்துள்ளது. இந்த வங்கி இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தோடு இணைக்க முன்மொழியப்பட்டு பின்னா் இந்திய ரிசா்வ் வங்கியால் ரத்து செய்யப்பட்டது. இதையெல்லாம் கடந்து 100 ஆண்டுகளுக்கும் மேல் இந்த வங்கி நிலைத்து நிற்கும். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆதரவற்றோா், முதியோா் காப்பகத்திற்கு நிதியுதவி செய்து வருகிறோம். வங்கி அதிகாரிகள் சங்கமானது கடந்த 1966-இல் அக்டோபா் 2-ஆம் தேதி சேலத்தில் துவக்கப்பட்டது. வாடிக்கையாளா்களை கெளரவிக்கும் வகையில் நமஸ்தே என்ற நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளோம்.

பிசிஐ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எங்கள் வங்கி, கடந்த இரு மாதங்களில மட்டும் வராக்கடன் ரூ.300 கோடி வசூலித்துள்ளோம். மேலும் வராநிலையில் உள்ள கடன்களையும் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனா்.

பேட்டியின்போது, சங்கத்தலைவா் வி.பத்ரி, பொருளாளா் மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com