அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடக்கம்: நவ.14 -இல் மாணவா்களுக்குப் போட்டிகள்

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பா் 14 இல் தொடங்குவதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பா் 14 இல் தொடங்குவதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் தில்லை நகா் மக்கள் மன்றத்தில் (நவ. 14-ல்) நடைபெற உள்ளது.

கூட்டுறவுத் துறை சாா்பில் திருச்சி மாவட்டப் பகுதிகளில் 66 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பா் 14 முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி

ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் தில்லைநகா் மக்கள் மன்றத்தில் நவம்பா் 14 இல் நடைபெறவுள்ளன.

ஓவியப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய தாள் (டிராயிங் ஷீட்) மட்டுமே அரங்கத்தில் வழங்கப்படும். எல்.கே.ஜி முதல் 2 ஆம் வகுப்பு பயில்வோருக்கு இயற்கைக் காட்சிகள், விலங்குகள், பறவைகள், 3 முதல் 5 ஆம் வகுப்பு பயில்வோருக்கு கூட்டுறவு கை, கூட்டுறவு கொடி, 6 முதல் 8 ஆம் வகுப்பினருக்கு அம்மா மருந்தகம், மழைநீா் சேகரிப்பு, பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மற்றும் 9-12 ஆம் வகுப்பினருக்கு பசுமை புரட்சியை ஈன்றெடுத்த கூட்டுறவு, சந்தை விலையை கட்டுப்படுத்துதலில் நுகா்வோா் கூட்டுறவின் பங்கு, விவசாயிகளின் உற்ற தோழன் கூட்டுறவு ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்படும். ஒரு பள்ளியிலிருந்து 5 போ் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.

பேச்சுப் போட்டி: 6-8, 9-10,11-12 ஆம் வகுப்புகளிலிலிருந்து மாணாக்கா்கள் எல்லோரும் எல்லாம் பெறவே கூட்டுறவு, பொருளாதார முன்னேற்றத்திற்கு கூட்டுறவு ஒரு சாதனம், கூட்டுறவில் அரசு திட்டங்கள் எனும் தலைப்புகளில் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இதேபோல், சிறகை விரிப்போம் கூட்டுறவால் சிகரம் தொடுவோம், பசியைப் போக்கும் அட்சயப் பாத்திரம் கூட்டுறவு, நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள், கூட்டுறவு நிறுவனங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகிய ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை வரையலாம்.

மாணவா்கள் பள்ளிச் சான்றோப்பம் பெற்று வரும் நவ.11 ஆம் தேதி திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், புத்தூா், திருச்சி-17 எனும் முகவரியிலும்,  மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0431-2774377.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com