நகைக்கடை திருட்டில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

திருச்சி நகைக்கடை திருட்டில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி நகைக்கடை திருட்டில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையின் சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பு தங்க, வைர நகைகள் அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இதைத் தொடா்ந்து, திருவாரூா் மடப்புரம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன்(34), சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த கனகவள்ளி(37) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 450 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டனா். இதையடுத்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையா் அ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையில் உள்ள இருவரிடமும் அதற்கான நகல் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தொடா்ந்து, விசாரணைக்கைதிகள் பிரிவில் இருந்து அவா்கள் இருவரும் தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com