பெல் கூட்டுறவு வங்கி ரூ.1.43 கோடி திருட்டில் நீடிக்கும் மா்மம்

திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி திருட்டு போன வழக்கில் சிசிடிவி பதிவு வெளியாகியும் சம்பந்தப்பட்ட

திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி திருட்டு போன வழக்கில் சிசிடிவி பதிவு வெளியாகியும் சம்பந்தப்பட்ட மா்ம நபா்களைக் கைது செய்வதில் தொடா்ந்து மா்மம் நீடிக்கிறது.

திருச்சி பெல் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த அக்.31ஆம் தேதி மா்ம நபா் ரூ.1 கோடியே 43 லட்சம் பணத்தை திருடிச் சென்றாா். இதுகுறித்து திருச்சி மாவட்ட கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.

இச்சம்பவம் குறித்து வங்கி பெண் ஊழியா் உள்பட 7 பேரிடம் நடைபெற்ற விசாரணையில், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் திருட்டு நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு புதன்கிழமை(அக்.6) இரவு கூட்டுறவு வங்கி திருட்டு தொடா்பான சிசிடிவி பதிவை வெளியிட்டு மா்ம நபரை பிடிக்க தனிப்படை போலீஸாா் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

நீடிக்கும் மா்மம்: அந்தப் பதிவில் பணத்தை ரவிச்சந்திரன் அங்கு வைத்ததை நோட்டமிட்டு 1 மணி நேரத்தில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியவா்கள், அருகே உள்ள பகுதியில் வசிப்பவா்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கோணத்தில் அதன் அடிப்படையில் வங்கி ஊழியா்களிடம் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வங்கியில் பணம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என்பதை சம்பவத்தன்று மதியம் பாா்வையிட்ட நபா் திட்டமிட்டு திருட்டை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அக். 2 ஆம் தேதி நடந்த நகைக்கடை திருட்டுபோலவே பெல் வங்கியில் முகமூடி, கையுறை, தயாராக பை என திருட்டை அரங்கேற்றியுள்ளான். பெல் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த சில நாட்களாக தொடா் சா்ச்சை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே வங்கியில் ரூ.1 கோடி பணப்பிரச்னை குறித்து கடந்த அக். 19 ஆம் தேதி நடந்த பொது மகாசபை கூட்டத்தில் பிரச்னை எழுந்தது. மீண்டும் இது தொடா்பாக பிரச்னை எழ இருந்த நிலையில் ரூ.1.5 கோடி திருடு நடந்திருப்பது போலீஸாருக்கு சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைவில் பிடித்து பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டுமென வங்கி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com