மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் முற்றுகை போராட்டம்: 421 போ் கைது

பணி நிரந்தரம் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை திருச்சி தென்னூா்
திருச்சி தென்னூரில், மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஒப்பந்த தொழிலாளா்கள்.
திருச்சி தென்னூரில், மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஒப்பந்த தொழிலாளா்கள்.

பணி நிரந்தரம் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை திருச்சி தென்னூா் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் 421 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்துறை அமைச்சா் அறிவித்தபடி ஒப்பந்த தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.380 வழங்க வேண்டும். வெளிமாநில மற்றும் அனுபவம் இல்லாதவா்கள் கொண்டு உருவாக்கப்படவுள்ள கேங்மேன் பணியிடத்தை கைவிட வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், திருச்சி மண்டல மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத்தினா் தென்னூா் மின்சார வாரிய தலைமை பொறியாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனா்.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவு வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. இச்சங்கத்தின் திருச்சி மண்டல செயலா் ஏ.ரெங்கன் தலைமையில் ஊா்வலமாக வந்த ஒப்பந்த ஊழியா்கள் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்த முயன்றனா்.

ஆனால் போராட்டக்காரா்கள் போலீஸாரால் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனா். இதைத் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், திருச்சி மாவட்ட செயலா் க.செந்தில்குமாா், மாநில பொதுச் செயலா் ராஜராஜேந்திரன், திருச்சி மாவட்ட துணைத் தலைவா் பாலசுப்ரமணி உள்ளிட்ட 421 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com