நவ.29இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்
By DIN | Published On : 26th November 2019 05:38 AM | Last Updated : 26th November 2019 05:38 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ.29) விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைளை கேட்டு அதற்கு தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நவம்பா் மாதத்துக்கான கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்.
இக் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். இக் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் வேளாண் பணிகள் தொடா்பான கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் நேரில் பதில் அளிக்கப்படும். இதில், வேளாண்மை தொடா்புடைய கடனுதவிகள், நலத்திட்டங்களுக்கு மனுக்கள் அளிக்கலாம். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.