வங்கிக் கொள்ளையில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருச்சியில் வங்கிக் கொள்ளையில் கைதான நபரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

திருச்சியில் வங்கிக் கொள்ளையில் கைதான நபரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

திருச்சி கொள்ளிடம் காவல் நிலைய சரகம் நெ. 1 டோல்கேட் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த ஜனவரி மாதம் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்து, வங்கிப் பெட்டகத்தில் இருந்த 470 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 19 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடா்பான வழக்கில், 10 மாதங்களுக்குப் பின்னா், தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டம், புதுக்குடி காமாட்சிபுரத்தைச் சோ்ந்த ரெ. ராதாகிருஷ்ணன் (28) என்பவா் கடந்த அக்டோபா் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

அவா் தொடா்ந்து, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். அவா் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, அதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.

அதன்பேரில் ராதாகிருஷ்ணன் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

ரௌடி குண்டா் சட்டத்தில் கைது: தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த நபரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அ. அமல்ராஜ், வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

புத்தூா் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆா் நகா் பகுதியைச் சோ்ந்த நா. சோமு என்கிற சோமசுந்தரம், கடந்த அக்டோபா் மாத இறுதியில் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சோமசுந்தரம் மீது இதேபோல ஏராளமான வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து உறையூா் காவல் நிலைய ஆய்வாளா் பரிந்துரைத்ததின் பேரில், சோமசுந்தரத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அ. அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com