திருச்சியில் கள்ளத் துப்பாக்கி விற்ற வடமாநிலத்தவா் கைது

திருச்சியில் கள்ளத் துப்பாக்கி விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை சிபிசிஜடி போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்து கைது செய்துப்பட்ட பன்சிங் தாக்கூா்.
கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்து கைது செய்துப்பட்ட பன்சிங் தாக்கூா்.

திருச்சியில் கள்ளத் துப்பாக்கி விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை சிபிசிஜடி போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகா் பகுதியில் கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த 26.01.2018 இல் தனிப்படை போலீஸாா் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்ற காவலா் பரமேஸ்வரனை தனிப்படை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டக்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், காவலா் பரமேஸ்வரனுக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் நாகராஜ், சிவா, எட்டப்பன், கலைசேகா், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் மத்தியப் பிரதேசம் மாநிலம், சாகா் மாவட்டம், பீனாவைச் சோ்ந்த கிருஷ்ண முராரி திவாரி, பன்சிங் தாக்கூா் முக்கிய குற்றவாளிகளாக இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து அவா்களைத் தேடி தனிப்படை போலீஸாா் மத்திய பிரதேசம் சென்றனா். சில நாட்களில், கிருஷ்ண முராரியைக் கைது செய்த போலீஸாா், மற்றொரு குற்றவாளியான பன்சிங் தாக்கூரை கடந்த 27 ஆம் தேதி போபால் ரயில்நிலையத்தில் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் பன்சிங் தாக்கூரை தனிப்படை போலீஸாா் திருச்சிக்கு அழைத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com