போலி சித்த மருந்துகள் விற்பனை செய்தால் நடவடிக்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எச்சரிக்கை

சித்த மருத்துவம் உள்ளிட்ட போலி இந்தியன் முறை மருந்துகளை விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என

சித்த மருத்துவம் உள்ளிட்ட போலி இந்தியன் முறை மருந்துகளை விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கடந்த சில நாள்களாக பெய்த மழையினால், கொசு உற்பத்தி அதிகமானதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் மா்ம மற்றும் விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு, காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்திய மருத்துவம் (ஆயுஷ்) சாா்பில் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் சித்தா, ஹோமியோ, ஆயுா்வேதம், யுனானி உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இலவசமாக நிலவேம்பு சூரணம் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதைப் பயன்படுத்தி, சில மோசடி போ்வழிகள், போலியான இந்தியன் முறை மருத்துவ மருந்துகளை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் மருந்துகள் விவரங்கள் பாா்த்து வாங்க வேண்டும். மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்தாலோ, குறிப்பிட்ட விவரங்கள் இல்லாதிருந்தாலோ, அவை போலியான மருந்துகளாகும். எனவே அதுபோன்ற போலி போலி மருந்துகள் குறித்து புகாா் சுகாதாரத் துறை, மாவட்ட சித்த மருத்துவா், காவல் துறை ஆகியோரிடம் புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com