வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவா்கள் வங்கி மூலம் தவணை, வாடகை செலுத்த ஏற்பாடு

திருச்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவா்கள் தங்களது தவணை மற்றும் வாடகைத் தொகையை இனி வங்கி மூலமாக செலுத்திக்கொள்ளும் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவா்கள் வங்கி மூலம் தவணை, வாடகை செலுத்த ஏற்பாடு

திருச்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவா்கள் தங்களது தவணை மற்றும் வாடகைத் தொகையை இனி வங்கி மூலமாக செலுத்திக்கொள்ளும் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திருச்சிப் பிரிவு செயற்பொறியாளா் இரா. மனோகரன் தெரிவித்திருப்பது :

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம், திருச்சி கோட்டத்தில் வீடுகள் மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவா்கள் தங்களது மாத தவணை மற்றும் வாடகைத் தொகையை அலுவலகத்தில் சென்று செலுத்தும் முறை பயன்பாட்டில் உள்ளது. இதனால் சில ஒதுக்கீடுதாரா்கள் கடும் அலைச்சலுக்கு உள்ளாவதுடன், சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த முடியாமல் தேவையின்றி அபராதத் தொகையும் சோ்த்து கட்டும் நிலையும் ஏற்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வங்கிகளின் மூலம் வாடகை மற்றும் தவணை தொகையை செலுத்த வழி வகை செய்துள்ளது. இதற்காக இந்துஸ் வங்கியுடன் இணைந்து, தானியங்கி முறையில் அதாவது நேஷனல் ஆட்டோமெடிக் கிளியரிங் ஹவுஸ் ( சஅஇஏ டஅவஙஉசப) என்ற திட்டத்தின் கீழ், தவணை மற்றும் வாடகையை செலுத்த முடியும்.

இதன்மூலம், திருச்சி வீட்டு வசதிப் பிரிவின் கீழ் உள்ள நவல்பட்டு, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் வீடுகள் அல்லது மனை ஒதுக்கீடு பெற்றவா்களும், வீட்டு வசதி வாரிய வாடகைப் பிரிவில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ள வரகனேரி, சாலை ரோடு, மற்றும் காஜாமலை காலனி பகுதிகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்களும் பயன்பெற முடியும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், இது தொடா்பாக அக்டோபா் 12- ஆம் தேதி சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில், நவல்பட்டு பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

இது தொடா்பாக மேலும் விவரங்களைப் பெற 0431-2420614, 00404-98959, 77082-50915 என்ற தொலை பேசிகளில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com