திருச்சியில் இன்று கூடுகிறது காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் அறிவித்தபடி, திருச்சியில் வியாழக்கிழமை ஒழுங்காற்றுக் குழுவின் 19-ஆவது கூட்டம் நடைபெறுகிறது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் அறிவித்தபடி, திருச்சியில் வியாழக்கிழமை ஒழுங்காற்றுக் குழுவின் 19-ஆவது கூட்டம் நடைபெறுகிறது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை இரு அமா்வுகளாக (உணவு இடைவேளையுடன்) கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கேரளம், கா்நாடகம், புதுச்சேரி மாநில அதிகாரிகள், ஒழுங்காற்றுக் குழு உறுப்பினா்கள் பங்கேற்கவுள்ளனா். காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரும் பங்கேற்கவுள்ளாா்.

தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கா்நாடக அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான மாதாந்திர ஒதுக்கீட்டு அட்டவணையையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையளவு, காவிரிப் படுகையில் வானியல் சூழல், மழைப் பொழிவு மற்றும் பருவகால, ஆண்டுக்கான நீா் கணக்கீடுகள் குறித்து இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

வழக்கமாக புதுதில்லியிலும், பெங்களூருவிலும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக திருச்சியில் இக்கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com