மத்திய சிறையில் நெகிழி பொருள்கள் மறுசுழற்சி பணிகள் தொடக்கம்

திருச்சி மத்திய சிறையில் நெகிழி பொருள்கள் மறுசுழற்சி பணிகளை  சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

திருச்சி மத்திய சிறையில் நெகிழி பொருள்கள் மறுசுழற்சி பணிகளை  சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறைத்துறை நிர்வாகமும் தனது பங்களிப்பை அளிக்க முடிவு செய்துள்ளது.  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடியில் செவ்வாய்க்கிழமை முதல் காலி கிருமி நாசினி பாட்டிலை திரும்ப அளிக்கும் பட்சத்தில்  ரூ.1 வழங்கப்படும். ரூ.34-க்கு சலுகை விலையில் கிருமி நாசினி பாட்டில் பெறும் வகையில் விலைப் பட்டியலை சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காலி பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் திட்டப் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் திங்கள்கிழமை மறுசுழற்சி செய்யும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  இதில், சிறைக் கண்காணிப்பாளர் சங்கர், அங்காடி திருமுருகன் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com