தென்னூர் சுப்பையா  பள்ளியில் காலை உணவுத்திட்ட  2 -ஆம் ஆண்டு தொடக்கவிழா

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை  நடைபெற்றது. 

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை  நடைபெற்றது. 
இவ்விழாவில் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் அ. சின்னராசு கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் சி. அருள்தாஸ் நேவிஸ்,  ஆர். ஜெயலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்திப் பேசினர். வட்டாட்சியர் கே. கோகுல், செங்குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஏ. ஆர். சிராஜூதின், சந்த்ரோதயம் தவமைய, யோகாபயிற்றுநர் காயத்ரி, பிஷப் ஹீபர் கல்லூரி விரிவுரையாளர் சிந்தியா, பள்ளித் தலைமை ஆசிரியர் கே.எஸ். ஜீவானந்தன், ஆசிரியை உமா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மேனாள் முதல்வருமான  சிவக்குமார் பேசுகையில், பள்ளி நேரங்களில் குழந்தைகளின் சோர்வை போக்குவதற்காகத்தான் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கு குழந்தைகள் தாமதமாக வருவதில்லை. தற்போது குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com