உ.வே. சாமிநாதையர் இலக்கியப் பேரவை சொற்பொழிவு

திருச்சி தேசியக் கல்லூரியில் உ.வே. சாமிநாதையர் இலக்கியப் பேரவையின் சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி தேசியக் கல்லூரியில் உ.வே. சாமிநாதையர் இலக்கியப் பேரவையின் சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசியக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை சார்பில், பார் போற்றும் பாரதி எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வர் இரா. சுந்தரராமன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில், வழக்குரைஞர் வேங்கை சந்திரசேகர் பேசியது:
தான் வறுமையில் வாடினாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதையே பெரிதும் பெருமையாகக் கொண்டிருந்தவர் பாரதி. தான் கற்ற 14 மொழிகளில் தமிழ்மொழி போல இனி எங்கும் காணோம் எனும் கவிதை வடிக்கவும் இந்தப் பெருமையே காரணமாக இருந்தது. 
வறுமையிலும் தேசியப் பற்று மிக்கவராகவும், சமூகச் சீரழிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். 
ரௌத்திரம் பழகு, குலத் தாழ்ச்சி கொள்ளல் பாவம், காக்கை குருவி எங்கள் ஜாதி, ஓடி விளையாடு பாப்பா என சமூக சிந்தனைகளுக்கான பாடல்களையும், கவிதைகளையும் படைத்தவர். 
மனித வாழ்க்கையில் நிலையற்றது எனும் தலைப்பில் ஈரோட்டில் அவர் ஆற்றிய உரையே இறுதியாகிப் போனது. அதன் பிறகு சில நாள்களிலேயே நம்மைவிட்டு நீங்கா தொலைவுக்கு சென்றுவிட்டார் பாரதி. 
அவர் மறைந்தாலும் அவரது கவிதைகளும், படைப்புகளும் பார் உள்ளவரையிலும், இந்த புவி உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும் என்றார் அவர்.
தமிழாய்வுத் துறைத் தலைவர் ச. ஈஸ்வரன் வரவேற்றார். தமிழ்ப் பேரவை துணைத் தலைவர் இரா. ரவிச்சந்திரன், தமிழாய்வுத்துறை துணைத் தலைவர் ந. மாணிக்கம், முனைவர் க. புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com