மாரத்தான் ஓட்டம்: 3,500 பேர் பங்கேற்பு

திருச்சியில் புனித வளனார் கல்லூரி சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் 3,500 பேர் பங்கேற்றனர்.


திருச்சி: திருச்சியில் புனித வளனார் கல்லூரி சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் 3,500 பேர் பங்கேற்றனர்.

புனித வளனார் கல்லூரி தொடங்கி 175 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், 5 கி.மீ, 10 கி.மீ. என இரு பிரிவாக போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறார், சிறுமியர், முதியோர், கல்லூரி முன்னாள் மாணவ, மாணவியர் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 

போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தொடங்கி வைத்தார். மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், கல்லூரி நிர்வாகிகள் ரெக்டார் லியனார்டு பிராண்டோ, செயலாளர் எஸ். பீட்டர், முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், தாளாளர் இலங்கேஸ்வரன், ஜோசப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். ஜோசப் கென்னடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் 10 கி.மீ. தொலைவுக்கான போட்டி ஆண்கள் பிரிவில் வி. தேவராஜ், பெண்கள் பிரிவில் கே. கீதா ஆகியோர் முதல் பரிசாக தலா ரூ. 25,000 பெற்றனர். 5 கி.மீ. தொலைவு போட்டியில் பள்ளி சிறுவர்களுக்கான போட்டி ஆண்கள் பிரிவில் பி. பொன்னிசைக்கி, பெண்கள் பிரிவில் ஆர். சிவகாமி ஆகியோரும், பணியாளர்கள் போட்டி ஆண்கள் பிரிவில் செல்வகுமார், பெண்கள் பிரிவில் கவிதா, கல்லூரி மாணவியர் பிரிவில் இ. பிரீத்திரீனா, மூத்தோர் பிரிவில் கே. பிரபாகரன், முன்னாள் மாணவர் பிரிவில் ஜெ. அருண், மூத்த குடிமகன்கள் பிரிவில் டி.எம். மனோகாரன் ஆகியோர் முதல் பரிசுகளை (தலா ரூ. 7000) பெற்றனர்.

தவிர போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றுகள், சீருடை உள்ளிட்டவை  வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com