கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தினர் தர்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை தர்ணாவில்ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை தர்ணாவில்ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். 44 தொழிலாளர் சட்டங்களை 4- ஆக சுருக்கியதால், நடைமுறையில் தொழிலாளர்களுக்கு இருந்து வந்த வேலை பாதுகாப்பும், ஊதிய பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிட்டன. எனவே தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது.
 கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களிலுள்ள ரூ.40 ஆயிரம் கோடி நல நிதி இருப்பை மத்திய அரசு தனது தேவைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா நடைபெற்றது.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், திருச்சி மாவட்ட  பழைய ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற  போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் சி. செல்வகுமார் தலைமை வகித்தார். ஓவியர் வீராசாமி, பி. துரைராஜ், எம்.ஆர். முருகன்  முன்னிலை வகித்தனர். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.கே. திராவிட மணி, முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சிவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
போராட்டத்தை சங்க மாநிலத் துணைத் தலைவர் க. சுரேஷ் முடித்து வைத்து பேசினார்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் தர்னாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com